EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
‘ரஷிய வான்வெளியைப் பயன்படுத்த வேண்டாம்’ – ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

‘ரஷிய வான்வெளியைப் பயன்படுத்த வேண்டாம்’ – ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

புரட்டாதி 3, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், அதற்குப் பதிலடியாக ரஷிய எல்லைக்குட்பட்ட ராணுவ இலக்குகள் மீது உக்ரைன் தனது வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால் ரஷிய வான்வெளி வணிகரீதியான பயணிகள் விமானங்களுக்கு பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சர்வதேச விமான நிறுவனங்களுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்லும் பயணிகள் விமானங்கள் ட்ரோன்கள் நிறைந்த வான்வெளியில் பறப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும், இதனால் ரஷியாவின் வான்வெளி விரைவில் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெலன்ஸ்கியின் இந்த எச்சரிக்கைக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், பயணிகள் விமானப் போக்குவரத்தை அச்சுறுத்தும் வகையில் பேசுவது “அரசு பயங்கரவாதம்” என்று சாடியுள்ளார்.

மேலும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களுடன் ரஷியா ஒருபோதும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தாது என்று திட்டவட்டமாகக் கூறிய புதின், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார இலக்குகள் மீது ரஷியப் படைகள் தீவிரமான பதிலடித் தாக்குதல்களைத் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்தே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் ரஷிய வான்வெளியைத் தவிர்த்து வரும் நிலையில், இந்தியா, சீனா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் பயணிகள் விமானங்கள் ஆசிய-ஐரோப்பிய வழித்தடங்களுக்காக ரஷிய வான்வெளியை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.

தற்போது உக்ரைனின் நீண்டதூர ட்ரோன்கள் ரஷிய பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தி வருவதால், வான் பாதுகாப்பு அமைப்புகளின் குறுக்கீடு காரணமாக பயணிகள் விமானங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக சர்வதேச விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் அரசுப் பேருந்திலிருந்து விழுந்து 8 பழங்குடியின மாணவிகள் காயம்!
உலகம்

ஓடும் அரசுப் பேருந்திலிருந்து விழுந்து 8 பழங்குடியின மாணவிகள் காயம்!

புரட்டாதி 3, 2026
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல்!
உலகம்

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல்!

புரட்டாதி 3, 2026
நீட் இணையதளத்தை ஹேக் செய்த 12-ஆம் வகுப்பு கேரள மாணவர் – ஐஐடியில் பொறியாளராக நியமனம்
உலகம்

நீட் இணையதளத்தை ஹேக் செய்த 12-ஆம் வகுப்பு கேரள மாணவர் – ஐஐடியில் பொறியாளராக நியமனம்

புரட்டாதி 3, 2026
ரஷ்யாவில் வாடிக்கையாளரைத் தாக்க முயன்ற மனித உருவ ரோபோ!
உலகம்

ரஷ்யாவில் வாடிக்கையாளரைத் தாக்க முயன்ற மனித உருவ ரோபோ!

புரட்டாதி 3, 2026
அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்
உலகம்

அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்

புரட்டாதி 3, 2026
சீனாவில் பாரிய வெள்ளம்
உலகம்

சீனாவில் பாரிய வெள்ளம்

புரட்டாதி 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

அமரர் வி. தர்மலிங்கத்தின் 41வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்

அமரர் வி. தர்மலிங்கத்தின் 41வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்

13 மணத்தியாலங்கள் முன்னர்
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமைக்கு எதிராக விரிவுரையாளர்கள் போராட்டம்

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமைக்கு எதிராக விரிவுரையாளர்கள் போராட்டம்

15 மணத்தியாலங்கள் முன்னர்
வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

11 மணத்தியாலங்கள் முன்னர்
மணல் காட்டில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால்  தீ வைப்பு

மணல் காட்டில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைப்பு

5 நாட்கள் முன்னர்
பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In