வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் – பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட துன்னாலை வடக்கு , பொலிகண்டி தெற்கு மற்றும் வல்வெட்டித்துறை தென்கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் நேற்றைய தினம் சனிக்கிழமை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரால் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், பருத்தித்துறை பிரதேச செயலாளர் திருலிங்கநாதன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.











