சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில், வித்யா பாலன் ‘காந்தா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இது தொடர்பான சிறப்பு அறிமுக வீடியோ ஒன்றை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
முதன்மை பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வித்யா பாலனின் சேர்க்கை படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
இத்திரைப்படம் குறித்த ஏனைய மேலதிக தகவல்களும், இதில் நடிக்கும் மற்றைய நடிகர்கள் பற்றிய விவரங்களும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.











