EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

புரட்டாதி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட இரண்டு சொகுசுப் பேருந்துகள் பொலிஸாரால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டறியப்பட்டதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பறக்கும் படையினர் மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து செயற்பட்டனர்.

பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி ஈடுபடும் பேருந்துகளை அடையாளம் கண்டு, அவற்றின் வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களைப் பரிசோதித்து, சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதே இச்சோதனை நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.

இதன்போது உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்ட இரண்டு பேருந்துகள் கண்டறியப்பட்டன. அவை தொடர்பில் பொலிஸாரால் நீதிமன்றுக்கு முற்படுத்த திகதி குறிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட அதேவேளை தற்காலிகமாக நேற்றையதினம் சேவையைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்டன.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சில பேருந்துகள், அவற்றிடம் உரிய வழித்தட அனுமதிப்பத்திரங்கள் இல்லாத காரணத்தால் மாற்று மார்க்கங்கள் ஊடாகச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

தற்போது உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் அனைத்து பேருந்து உரிமையாளர்களும் இயக்குநர்களும் உடனடியாக இவ்வாறான சேவைகளை நிறுத்தி, தேவையான வழித்தட அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதியும் இதேபோன்ற சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்ட இரண்டு பேருந்துகள் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு
அண்மைய செய்திகள்

யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

புரட்டாதி 21, 2026
யாழில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புதிய பிரதிப் பணிப்பாளர் நியமிப்பு
இலங்கை

யாழில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புதிய பிரதிப் பணிப்பாளர் நியமிப்பு

புரட்டாதி 21, 2026
வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்
அண்மைய செய்திகள்

வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்

புரட்டாதி 21, 2026
நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு
அண்மைய செய்திகள்

நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு

புரட்டாதி 21, 2026
சிவராசா அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு  சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்
அண்மைய செய்திகள்

சிவராசா அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்

புரட்டாதி 21, 2026
மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டல்
அண்மைய செய்திகள்

மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டல்

புரட்டாதி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

யாழில் ஆரம்பமான அரச சேவை வலைப்பந்தாட்ட தேசிய மட்டப் போட்டிகள்

யாழில் ஆரம்பமான அரச சேவை வலைப்பந்தாட்ட தேசிய மட்டப் போட்டிகள்

5 நாட்கள் முன்னர்
பா.உ.நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி

நாமல் ராஜபக்சவின் விளக்கமறியல் நீடிப்பு

5 நாட்கள் முன்னர்
நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

7 நாட்கள் முன்னர்
நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு

நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு

2 மணத்தியாலங்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In