EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்

ஐப்பசி 1, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வியாழக்கிழமை(அக்டோபர் 01) நடத்திய வான்வழித் தாக்குதல்களில் வீடுகள் சேதமடைந்ததுடன், பலர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், பயங்கரவாதிகளின் மறைவிடங்களைக் இலக்குவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதல்களில் 22 “பயங்கரவாதிகள்” கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

சுமார் மூன்று மாதகால அமைதியான சூழலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் குனர் (Kunar) மற்றும் ஹெல்மண்ட் (Helmand) மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கான் தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் (Zabihullah Mujahid) தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் மீறிய ஒரு குற்றச் செயல் என அவர் கண்டித்துள்ளார்.

இதேவேளை, இத்தாக்குதல்களில் பெரும்பாலான சிறுவர்கள் உட்பட குறைந்தபட்சம் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகள் உதவிச் செயலகம் (UNAMA) தெரிவித்துள்ளது.

நம்பகமான உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் இரண்டு இடங்களில் அமைந்திருந்த பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் செய்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன், அங்கிருந்த பெருமளவிலான ஆயுதங்களும் வெடிபொருட்களும் அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் உருவானது.

எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தும் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.

எனினும், இக்குற்றச்சாட்டை மறுக்கும் தலிபான் அரசு, பயங்கரவாதம் என்பது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினை எனக் கூறி வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களில் பாகிஸ்தான் நடத்திய பல வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

அதேநேரம், பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வந்த ஐஎஸ் அமைப்பினர் உட்பட 28 போராளிகளைக் கொன்றதாக ஆப்கான் பாதுகாப்பு அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்த போதிலும், பாகிஸ்தான் அதனை நிராகரித்திருந்தது.

தொடர்புடைய செய்திகள்

தவெகவில் எந்தவொரு பிரச்சினையிலும் வெளிப்படை இல்லை: மார்க்சிஸ்ட் தலைவர் பெ.சண்முகம்
உலகம்

தவெகவில் எந்தவொரு பிரச்சினையிலும் வெளிப்படை இல்லை: மார்க்சிஸ்ட் தலைவர் பெ.சண்முகம்

ஐப்பசி 1, 2026
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
உலகம்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஐப்பசி 1, 2026
ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் முற்றாக வெளியேற்றம்
உலகம்

ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் முற்றாக வெளியேற்றம்

ஐப்பசி 1, 2026
டெல்லி பாஜக அலுவலகத்திற்கு JVP தூதுக்குழு விஜயம்!
உலகம்

டெல்லி பாஜக அலுவலகத்திற்கு JVP தூதுக்குழு விஜயம்!

ஐப்பசி 1, 2026
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: மோதிர தயாரிப்பு வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர்
உலகம்

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: மோதிர தயாரிப்பு வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர்

புரட்டாதி 28, 2026
துறவிகளை அவமதித்தால் சிறை தண்டனை: மேற்கு வங்க முதலமைச்சர்
உலகம்

துறவிகளை அவமதித்தால் சிறை தண்டனை: மேற்கு வங்க முதலமைச்சர்

புரட்டாதி 28, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலி

யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலி

6 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் 11ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபத்தின் 11ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

6 நாட்கள் முன்னர்
யாழில். மருந்து விசிறிய வாலைக்குழையை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத சிறை

யாழில். மருந்து விசிறிய வாலைக்குழையை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத சிறை

6 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பு தியாகதீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு தியாகதீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

5 நாட்கள் முன்னர்
தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check