முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளர் காவல்துறை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றில் முன்னிலையாகி வெளியேறிய போது, ஒளிப்பதிவாளர் ஒருவர் பிரமுகர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியை கமெராவால் தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் குறித்த சம்பவத்தில் தாக்கப்பட்ட பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி தற்போது நாரஹேன்பிட்டி காவல்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











