யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த இந்திய திரைப்பட நடிகர்களான வீரேந்திர சவுத்திரி – நமீதா தம்பதியினர், யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்திற்கு சென்று விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெ. விவேகானந்தன், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணியாளர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.
இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுற்றுலாத்துறையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும், வீரேந்திர சவுத்திரி- நமீதா குழுவினரால் வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











