EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழ் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

ஐப்பசி 6, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில், பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல் தலைமையில் வெகு கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் பட்டமளிப்பு வைபவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரையான மூன்று நாள்களும், ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பட்டம் பெற்ற பட்டதாரிகள், பல்கலைக்கழக அதிகாரிகள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள், நூலகர், நிதியாளர் மற்றும் பதிவாளர் ஆகியோர் முதலில் அணிவகுத்துச் செல்ல, தவில் நாதஸ்வர மங்கள வாத்தியங்கள் முழங்க துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி, பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல் ஆகியோர் கொடி, குடை, ஆலவட்டம் சகிதம் விழா மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மண்டபத்தினுள்ளே, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பேரவை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல், துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி ஆகியோர் பட்டதாரிகளுக்கும், டிப்ளோமாதாரிகளுக்கும் பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், பரிசில்கள், புலமைப்பரிசில்களை வழங்கியதோடு, சாதனை மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களையும் அணிவித்தனர்.

இம்முறை பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், கலைப்பீடம், விஞ்ஞானபீடம், விவசாயபீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், தொழில்நுட்பப் பீடம், பொறியியல் பீடம், மருத்துவ பீடம், இந்துக் கற்கைள் பீடம், சித்த மருத்துவ பீடம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தைச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில் நுட்பக் கற்கைகள் பீடம் ஆகிய 14 பீடங்களையும் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்களும், தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கொழும்பு  மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான மஹிந்த கஹந்தகம கைது
அண்மைய செய்திகள்

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான மஹிந்த கஹந்தகம கைது

ஐப்பசி 6, 2026
ஹப்புத்தளை நகரில் கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஹப்புத்தளை நகரில் கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

ஐப்பசி 6, 2026
காங்கேசன்துறையில் தங்கக் கடத்தல் முயற்சி முறியடிப்பு
இலங்கை

காங்கேசன்துறையில் தங்கக் கடத்தல் முயற்சி முறியடிப்பு

ஐப்பசி 6, 2026
மட்டக்களப்பில் கட்டிட சுவர் இடிந்து ஒருவர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் கட்டிட சுவர் இடிந்து ஒருவர் உயிரிழப்பு

ஐப்பசி 6, 2026
கண்டாவளை பாடசாலைகளுக்கு 15 இலட்சம் ரூபா நிதியுதவி
அண்மைய செய்திகள்

கண்டாவளை பாடசாலைகளுக்கு 15 இலட்சம் ரூபா நிதியுதவி

ஐப்பசி 6, 2026
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஐப்பசி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழில் மரக்குற்றிகளுடன்  ஒருவர் கைது

யாழில் மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

2 நாட்கள் முன்னர்
மயானத்தில் புதைக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு

மயானத்தில் புதைக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு

2 நாட்கள் முன்னர்
யாழ் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

11 மணத்தியாலங்கள் முன்னர்
பலாலியில் 16ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

பலாலியில் 16ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

2 நாட்கள் முன்னர்
போதைப்பொருள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

போதைப்பொருள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check