இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் முதன்முறையாகப் பயிற்றுவிப்பாளராக களமிறங்கவுள்ளார்.
Delhi Capitals அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகவும், உதவிப் பயிற்றுவிப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்ட நிலையில், அவருடன் இணைந்து பணியாற்ற யுவராஜ் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி அணியுடன் தனது புதிய பயணத்தைத் தொடங்குவதில் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், சவுரவ் கங்குலியுடன் இணைந்து பயிற்றுவிப்பாளராகச் செயல்படுவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் வெற்றிகரமான சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவரான யுவராஜ் சிங், 2007 இருபதுக்கு 20 மற்றும் 2011 ஒருநாள் உலகக் கிண்ணங்களை இந்தியா வெல்ல முக்கியப் பங்காற்றியுள்ளார்.
இவர் 2000 முதல் 2017 வரை இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.











