வவுனியா மாநகர சபையின் பண்டாரிக்குளம் வட்டார உறுப்பினரான சிவசுப்பிரமணியம் பிரேமதாஸவை, விசாரணைக்காக வருகை தருமாறு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று (20) காலை, வவுனியா மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்திற்கு வருகை தருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடையதாக, அவரிடமிருந்து வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வசிக்கும் குறித்த மாநகர சபை உறுப்பினரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இந்த விசாரணை தொடர்பான மேலதிக விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.











