ஆர்.ஜே. பாலாஜி மற்றும் நயன்தாரா கூட்டணியில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இத்திரைப்படத்தில் நயன்தாரா மீண்டும் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நிலையில், இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் இத்திரைப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்.
இந்த நிலையில், ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் புதிய வீடியோ ஒன்று தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ, வெளியான குறுகிய நேரத்திலேயே இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அத்துடன், ரசிகர்களின் பெரும் கவனத்தையும் ஈர்த்து சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.











