வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தியத் திரையுலகில் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் “ராமாயணா” திரைப்படத்தின் ‘ராவண தாண்டவம்’ பாடல் வெளியாகியுள்ளது.
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தின் மிரட்டலான ‘ராவண தாண்டவம்’ பாடல் தசரா பண்டிகையை முன்னிட்டு டி-சீரிஸ் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர்.
மேலும், இணை தயாரிப்பாளரான ‘கே.ஜி.எஃப்’ புகழ் யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும், ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் முக்கியப் பாத்திரங்களில் ஏற்று நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஸ்ரீதர் ராகவன் மற்றும் இயக்குநர் நிதேஷ் திவாரி இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.
ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் இப்படத்திற்கு பின்னணி இசையமைக்கிறார்கள்.
சிவனின் மீதான பக்தியை வெளிப்படுத்தும் ‘ராவண தாண்டவம்’ பாடலை ராக் பாடகர் விஷால் தத்லானி பாட, டாக்டர் குமார் விஸ்வாஸ் வரிகளை எழுதியுள்ளார்.
ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்பாடல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட முக்கிய இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது.
பான்-இந்தியா திரைப்படமாக இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 5-ம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதன் இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.











