நடிகர் விஜய், திரிஷா நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ‘திருப்பாச்சி’ திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 25ஆம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒக்டோபர் மாதம் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பேரரசு இயக்கத்தில், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தில் விஜய், திரிஷா, மல்லிகா, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அண்ணன் – தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் வெளியான காலப்பகுதியில் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான திரைப்படமாகவும் அமைந்தது.











