சன்னரகப் பொன்னி அரிசி கொள்முதல் செய்வது தொடர்பாக தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அரிசி விலையேற்றத்துக்கான தீர்வாகக் கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசியை ரூ.30-க்கு வாங்கலாம் என அரசு அறிவித்திருந்த நிலையில், ரேஷன் கடைகளில் வழக்கமாக வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியைப் பாலிஷ் செய்து சன்னரகப் பொன்னி அரிசி என விற்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், வெறும் 250 இடங்களில், குடும்பத்துக்கு தலா 5 கிலோ மட்டும் சன்னரகப் பொன்னி என்ற பெயரில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்படுவதாகத் தொடர் புகார்கள் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ‘சன்னரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு இந்த அரசு எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை? என்ன விலைக்கு அவர்கள் அரசுக்குப் பொன்னி அரிசியை வழங்கினார்கள்? அரசு பொதுமக்களுக்கு எவ்வளவு மானிய விலையில் அரிசியை வழங்குகிறது?’ என்பது குறித்து ஆட்சியாளர்கள் பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப்படைத்தன்மையுடன் பதிலளிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.











