இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் திரைப்படம் “டேர் டெவில்”
இந்த படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
படத்தில் முதன்மை நடிகர்கள் தேர்வில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் முன்னதாக ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
ஆனால் தற்போது அவருக்கு பதிலாக கயாடு லோஹர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இப்படத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அதிலும் மாற்றம் செய்யப்பட்டு உன்னி முகுந்தன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.











