தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.
இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம் மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு ஆண்ட்ரூ லூயிஸ் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
தியாகராஜன் குமாரராஜாவின் ‘டைலர் டர்டன் மற்றும் கினோ பிஸ்ட்’ நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.











