நிகில் முரளி இயக்கத்தில் ஆர்யா, நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா உள்ளிட்டோர் நடிப்பில் காதல் களத்தில் உருவாகியுள்ள படம் ‘ஹலோ காதல்’.
இப்படத்தின் முதல் பாடலான ‘கண்ணும் கண்ணும்’ வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
விவேக் வரிகளில், கபிலன் மற்றும் சிவாங்கி இணைந்து இப்படத்தின் பாடலைப் பாடியுள்ளனர்.
தி ஷோ பீப்பிள் மற்றும் சில்வர் கிரைன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.
முன்னதாக, இப்படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்யா நடிப்பில் கடைசியாக ‘மிஸ்டர் எக்ஸ்’ படacம் வெளியான நிலையில், அவர் பா. இரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
அந்தப் படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.











