போதுமான எரிவாயுவை விநியோகிக்கத் தவறியதுடன், நுகர்வோரைத் தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நுகர்வோர் விவகார ஆணையம் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதற்கிடையில், ஹம்பாந்தோட்டை முனையத்திலுள்ள 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவையும் உள்நாட்டுச் சந்தைக்கு விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், லிட்ரோ எரிவாயு விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதுடன், நவம்பர் மாதத்திற்காக 41,000 மெட்ரிக் தொன் எரிவாயு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லாஃப் சிலிண்டர்களுக்காக வைப்புத்தொகை செலுத்திய நுகர்வோருக்கு அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.











