EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
2007ஆம் ஆண்டு கடத்தல் வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு

2007ஆம் ஆண்டு கடத்தல் வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு

ஐப்பசி 30, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில், 2007ஆம் ஆண்டு ஒருவரைக் கடத்திச் சென்று சிறை வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு, ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவர், கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டு, சவுக்கடி பகுதியில் சிறை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, அதே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நடராசா சதீஷ் ராசா எனப்படும் காதர் என்பவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கு விசாரணைகள், 2022ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி குறித்த நபர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இன்று 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒருவரைக் கடத்திச் சென்று பலவந்தமாகச் சிறை வைத்த குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டின் நம்பர்  தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அண்மைய செய்திகள்

டின் நம்பர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

ஐப்பசி 30, 2026
இஷாரா ஹர்ஷ குமாரவின் மரணம் – 17 பேரிடம் பெறப்பட்ட  வாக்குமூலம்
அண்மைய செய்திகள்

இஷாரா ஹர்ஷ குமாரவின் மரணம் – 17 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலம்

ஐப்பசி 30, 2026
லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை
அண்மைய செய்திகள்

லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஐப்பசி 30, 2026
மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

ஐப்பசி 30, 2026
ஹாலிஎல பகுதியில் மண்சரிவு அபாயம்
அண்மைய செய்திகள்

ஹாலிஎல பகுதியில் மண்சரிவு அபாயம்

ஐப்பசி 30, 2026
மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை!
அண்மைய செய்திகள்

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை!

ஐப்பசி 30, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டணியும் இணைந்து செயற்பட திட்டம்

தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டணியும் இணைந்து செயற்பட திட்டம்

3 நாட்கள் முன்னர்
இங்கிரியவில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து மீது தாக்குதல் – இருவர் கைது

சுகாதார பரிசோதகரின் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருள் – இருவர் கைது!

16 மணத்தியாலங்கள் முன்னர்
பச்சிலைப்பள்ளியில் 9.9 கோடி ரூபாய் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு

பச்சிலைப்பள்ளியில் 9.9 கோடி ரூபாய் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு

5 நாட்கள் முன்னர்
ஹோமாகம பொலிஸ் காவல் மரணம் – குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது

ஹோமாகம பொலிஸ் காவல் மரணம் – குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது

3 நாட்கள் முன்னர்
பொலிஸ் காவலில் உயிரிழந்த நபரின் மூளையில் இரத்தக் கசிவு

பொலிஸ் காவலில் உயிரிழந்த நபரின் மூளையில் இரத்தக் கசிவு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check