நாட்டில் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல், எட்டு முக்கிய பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள எண்ணான TIN சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளது.
வங்கிக் கணக்கு ஆரம்பித்தல், கட்டிடத் திட்ட அனுமதி பெறுதல், வாகனப் பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல், காணி உறுதிப் பதிவு, வணிகப் பதிவு, நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றுதல் மற்றும் கடன் அட்டை பெறுதல் ஆகியவற்றுக்கு TIN சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடையவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும் எனவும், இதுவரை TIN பெறாதவர்கள் திணைக்களத்தின் இணையவழி மின்-சேவை மூலம் பதிவு செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நவம்பர் முதலாம் திகதிக்கு முன்னதாக TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.











