வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (எஸ்ஐஆர்) எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கே, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளார்.
டெல்லியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியின் இல்லத்தில் வைத்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
நாளை (01.11.2026) டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு முன்னதாக இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதன்போது, எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளை எதிர்த்து குரல் எழுப்பி வரும் அபிஜீத் தீப்கே மற்றும் பிற இளம் ஆர்வலர்களின் முயற்சிகளை மம்தா பானர்ஜி பாராட்டினார்.
இளம் தலைமுறையின் இந்த இயக்கம் குறித்து தான் பெருமைப்படுவதாகத் தெரிவித்த அவர், நாளை நடைபெறவுள்ள பேரணிக்கு அபிஜீத் தீப்கேவும் அவரது சகாக்களும் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
மேலும், சிஜேபி தொண்டர்களுக்கு தனது கட்சியின் முழு ஆதரவும் இருக்கும் என்றும், பல நெருக்கடிகளைக் கடந்து இந்த இயக்கம் முன்னோக்கிச் சென்றுள்ளது பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.











