வருடாந்த மீன் உற்பத்தியில் சுமார் 40 சதவீதம் அறுவடைக்குப் பின்னரான வீணடிப்பால் இழக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் வருடாந்த மீன் உற்பத்தி சுமார் நான்கு இலட்சம் மெட்ரிக் தொன்களாக உள்ள நிலையில், வீணடிப்பைக் குறைத்து மீனவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மீன்களின் விலையைக் கட்டுப்படுத்துதல், நவீன மீன்பிடிக் கப்பல்களை அறிமுகப்படுத்துதல், மீன்பிடித் துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பை விரிவுபடுத்துதல் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.











