நாட்டில் சிற்றுண்டி வகைகளின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி நள்ளிரவு முதல் லாப்ஸ் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சிற்றுண்டிகளின் விலை அதிகரிக்கப்பட்டது.
இதன்படி தற்போது லாப்ஸ் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் இவ்விலையும் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
லாப்ஸ் எரிவாயு பயன்படுத்தும் உணவகங்களில் மாத்திரம் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், கொத்து மற்றும் ரைஸ் வகைகளுக்கு 10 ரூபா விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் சிற்றுண்டி வகைகளின் விலைகள் 2 ரூபாய் 50 சதத்தாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.











