நிந்தவூர் கடற்கரையில் நேற்றையதினம் (20) நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களில் ஒருவர், அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காணாமல் போன இளைஞர்கள் 16 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காணாமல் போன இளைஞர்களைத் தேடும் பணிகளில் கடற்படை சுழியோடிகள், அப்பகுதி மக்கள் மற்றும் நிந்தவூர் பொலிஸார் இணைந்து ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











