கியூபெக் மாகாணத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர்களில் ஒருவரான அயூப் மொஹமட் (Ayoub Mohamed) என்பவர், அண்டை மாகாணமான ஒன்டாரியோவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கியூபெக் மாகாணப் பொலிஸார் இன்று (25.11.2026) உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஒன்டாரியோவின் லண்டன் (London) பொலிஸ் சேவையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் நிலைக் கொலை (Second-degree murder) குற்றச்சாட்டுக்களின் கீழ் இன்று வேலிஃபீல்ட் நீதிமன்றத்தில் (Valleyfield Courthouse) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி கியூபெக்கின் சலபெரி-டி-வேலிஃபீல்ட் (Salaberry-de-Valleyfield) பகுதியில் ஜோர்டன் காக்னே (Jordan Gagné) என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 19 வயதான அயூப் மொஹமட்டைக் கைது செய்வதற்கு நாடு தழுவிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் தேடப்படும் 25 முக்கிய நபர்களின் பட்டியலான ‘போலோ’ (BOLO – Be On the Lookout) திட்டத்தில் நான்காவது இடத்தில் அயூப் மொஹமட் இடம்பெற்றிருந்தார்.
அத்துடன், இவரைக் கைது செய்வதற்கான தகவலை வழங்குபவர்களுக்கு 50,000 டொலர்கள் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











