EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
Jaffnaதமிழ் பொது வேட்பாளர் – அரசியல் இலக்கற்ற சந்தர்ப்பவாத செயற்பாடு

Jaffnaதமிழ் பொது வேட்பாளர் – அரசியல் இலக்கற்ற சந்தர்ப்பவாத செயற்பாடு

ஆவணி 28, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடதலை காண்பிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்

யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலில் சந்தர்ப்பவாதிகளாக கட்டமைப்பை உருவாக்குவதாக கூறியவர்களில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

இது அரசியல் இலக்கற்ற சந்தர்ப்பவாத செயற்பாடு என ஏற்கனவே நாம் தெளிவுபடுத்தியிருந்தோம். அது இப்போது நடைமுறையில் அரங்கேறி வருகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளை தமிழ் மக்கள் உன்னிப்பாக அவதானித்துக்கொள்ள வேண்டும். பொதுக்கட்டமைப்பு என கூறிக்கொண்டவர்களில் ரெலோ அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளார்.

இது அந்த கட்டமைப்பு என சொல்லிக்கொள்வதில் தமிழ் மக்களுக்கான எவ்வித அரசியல் வழிகாட்டல்களையும் காண்பிக்காமல் ஜனாதிபதிக்கு ஆதரவை தெரிவிப்பதும் அவரை சந்திப்பதும் ஒருபுறத்திலும் மறுபுறத்தில் தமிழரின் அடையாளர் என்றும் பேசிக்கொள்வதும் தேர்தல் பித்தலாட்டமாகவே காணமுடிகின்றது.

உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடத்தலை காண்பிக்க முடியுமா? என சிந்தித்தால் அது தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு சங்கு ஊதுவதாகவே முடியும்.

இதேநேரம் எமது கட்சி ஆதரிக்கும் ரணில் விக்ரமசிங்க மாகாணசபைக்குரிய அதிகாரங்கள் வழங்கப்படுவதுடன் குறிப்பாக காணி அதிகாரம் வழங்கப்படும் அதேநேரம் பொலிஸ் அதிகாரத்தை அமையவுள்ள நாடாளுமன்றில் விவாதித்து அதனூடாகவே தீர்மானிக்கப்படும் என்று கடந்த கால வரலாறுகளிலிருந்து கூறியிருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது நாடு நெருக்கடியான காலத்தில் இருந்தபோதும் அதை பொறுப்பெடுத்து மீட்சிபெற செய்து வருகின்றார்.
இவற்றுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் அரசியல் உரிமைசார் பிரச்சினை இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொண்டு செயற்படுகின்றார்.

ஆனால் சஜீத் பிரேமதாசவை எடுத்துக்கொண்டால் அவர் வடக்கு கிழக்கில் 1000 விகாரைகளை கட்டவேண்டும் என்கிறார். அதனூடாக இந்த நாடு ஒரு பௌத்த நாடு என்பதை பிரகடனப்படுத்துகின்றார்.

அதேபோன்று நாமல் ராஜபக்ச மாகாணசபை அதிகாரங்களைக் கூட கொடுக்க மறுக்கின்றார். மற்றொரு வேட்பாளரான அனுரகுமார திஸநாயக்கவை எடுத்துக்கொண்டால் நிலத்தொடர்புடன் தமிழ் பேசும் மக்கள் இருந்துவந்த வடக்கு கிழக்கை பிரித்து தமிழ் மக்கள் ஒருபோதும் ஒருசேர தாயக நிலத்துடன் இருக்க கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளார்.

எமது ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் நிலைப்பாடு மதசார்பற்றதாகவே இருக்கின்றது. அந்தவகையில் ஒரு மதமோ அல்லது மொழியோ இன்னொரு மதத்தையோ மொழியையோ ஆழமுடியாது என்பதாகவே உள்ளது.

தற்போது வளமான நாடு – அழகான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 70 ஆண்டுகளுக்கு மேலாக புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் எதுவும் கருத்திற்கொள்ளப்படவில்லை.குறைந்தபட்சம் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் பகிர்வு தொடர்பாக கூட கூறப்படவில்லை.

அதேவேளை மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஜே.வி.பி புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்கவதென்பதும் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பெரும்பான்மை பெறுவதென்பதும் சாத்தியமற்றதொன்று.

அதேவேளை இருக்கின்ற மாகாண முறைமைக்கு அதிகாரங்களை பகிரமுடியாதவர்கள் புதிய அரசியலமைப்பினூடாக தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையை அங்கீகரிப்பார்கள் என்பதும் அதனை ஜே.வி.பி செய்வதென்பதும் தமிழ் மக்களை முட்டாள்கள் என சித்தரித்தே ஜேவிபி இவ்வாறு கூற முனைகின்றது.

இதேநேரம் தற்தைய விஞ்ஞாபனத்தில் இருக்கின்ற மாகாணசபையை கூட மாவட்ட சபைகளாக்க அவர் முயற்சி செய்கின்றார்.

அவரது ஆக்ரோசமான பிரசாரங்களை பார்த்த மக்கள், அவர்களது விஞ்ஞாபனத்தில் புதிதாக ஏதும் இருக்குமா என ஆராய்ந்து பார்த்தால் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அந்த வகையில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரகடனம் யதார்த்தமற்ற அறிக்கையாக மட்டுமே வெளிவந்துள்ளது என மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்
அண்மைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

ஆனி 23, 2026
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்
அண்மைய செய்திகள்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

ஆனி 23, 2026
பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை
அண்மைய செய்திகள்

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

ஆனி 23, 2026
கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

ஆனி 23, 2026
யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்
அண்மைய செய்திகள்

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

ஆனி 23, 2026
யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும்  போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம்

ஆனி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பநிலை – சபை அமர்வு ஒத்திவைப்பு

வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பநிலை – சபை அமர்வு ஒத்திவைப்பு

2 நாட்கள் முன்னர்
வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!

6 நாட்கள் முன்னர்
பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

5 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம்

யாழில் இடம்பெற்ற ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம்

3 நாட்கள் முன்னர்
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In