கியூபெக் மாகாணத்தில் பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு ஆளும் CAQ அரசால் கொண்டுவரப்பட்ட ‘பில் 96′ சட்டமானது, பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் மற்றும் பிற மொழி பேசும் (Allophones) மாணவர்கள் ஆங்கில மொழிமூலக் கல்லூரிகளில் (CEGEPs) சேர்ந்து உயர் கல்வி கற்பதைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது.
இந்த விதிகளுக்கு மாற்றுப் பாதையை முன்வைத்துள்ள கியூபெக் லிபரல் கட்சி, தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த சேர்க்கைக் கட்டுப்பாட்டு வரம்புகளை நீக்கி, கல்வித் துறையில் மாணவர்களுக்கான சுயவிருப்ப உரிமையை மீண்டும் நிலைநிறுத்தப் போவதாகத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கியூபெக் மாகாணத்தில் உள்ள ஆங்கில மொழிமூலக் கல்லூரிகளில் (CEGEPs) பிரெஞ்சு மற்றும் பிற மொழி பேசும் மாணவர்கள் இணைவதற்குக் விதிக்கப்பட்டுள்ள கடுமையான வரம்புகளை (Enrollment Caps) முற்றாக நீக்கப் போவதாக, கியூபெக் லிபரல் கட்சி (PLQ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஷெர்புரூக் நகரில் நடைபெற்ற கட்சியின் பொதுக் குழு மாநாட்டில் இந்த மொழிக்கொள்கை மாற்றம் அறிவிக்கப்பட்டது.
கியூபெக் மாகாணத்தின் தற்போதைய ஆளும் கட்சியான CAQ கொண்டு வந்த ‘பில் 96’ (Bill 96) மொழிச் சட்டத்தின் கட்டுப்பாடுகள், மாணவர்களின் அடிப்படை கல்வி கற்கும் சுதந்திரத்தைப் பறிப்பதாகக் கூறி, இந்த மாற்றத்தை லிபரல் கட்சியின் ஆங்கிலேய நாடாளுமன்ற உறுப்பினர்கள் (Anglo MNAs) ஒருமனதாக வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.











