நாட்டில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 500 ml – 999ml கொள்ளளவு கொண்ட போத்தல்களின் விலை 80 ரூபாவாகவும், 1L – 1.49L கொள்ளளவு கொண்ட போத்தல்களின் விலை 120 ரூபாவாகவும், 1.5L – 1.99L கொள்ளளவு கொண்ட போத்தல்களின் விலை 150 ரூபாவாகவும், 2L – 2.49L கொள்ளளவு கொண்ட போத்தல்களின் விலை 180 ரூபாவாகவும், 5L – 6.99L கொள்ளளவு கொண்ட போத்தல்களின் விலை 400 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.











