இந்திய மத்திய அரசின் உயர்ந்த விருதாகிய பத்மஸ்ரீ விருதினை பெற்ற ஓதுவார் சுவாமிநாதன் இலங்கை வருகின்றார்.
இந்தியாவின் புகழ் பெற்ற மூத்த ஓதுவ மூர்த்தி திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார் , தற்போது தருமையாதீனத்தின் தேவாரப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக பணியில் உள்ளார்.
சமீபத்தில் இந்திய மத்திய அரசின் உயர்ந்த விருதாகிய பத்மஸ்ரீ விருதினை பெற்றுள்ளார். இவர் பத்மஸ்ரீ விருதினை பெற்ற முதல் ஓதுவார் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி தற்போது 81 வயதான போதும் தமிழகமெங்கும் பயணம் செய்து தற்போதும் திருமுறைப்பணி ஆற்றி வருகிறார் .
இம்மாதம் 25 ம் திகதி வத்தளை ஸ்ரீசுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் நடைபெறவுள்ள கும்பாபிஷேக நிகழ்விற்கு ஓதுவார் பணி செய்வதற்காக இலங்கை வருகிறார்.
அவருக்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தால் 25 ம் திகதி வியாழக்கிழமை மாலை 4.00 மணியில் இருந்து 6.00 மணி வரை, பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது .
இவ் விழாவில், கொழும்பு மாவட்ட தருமையாதீன பண்ணிசை வகுப்பு குழுவினர், மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பயிலுனர்கள், மற்றும், பாடசாலை மாணவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.











