EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
‘SKS’ ரகத் துப்பாக்கிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘PolySeSouvient’ அமைப்பு வலியுறுத்தல்

‘SKS’ ரகத் துப்பாக்கிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘PolySeSouvient’ அமைப்பு வலியுறுத்தல்

ஆனி 27, 2026
வகை: அண்மைய செய்திகள், கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் நகரில் அண்மையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் தாராளமாகக் கிடைக்கப்பெறும் சோவியத் காலத்து ‘SKS’ ரக அரை-தானியங்கி துப்பாக்கிகளின் புதிய விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

மொன்றியலின் கோட்-டெஸ்-நெய்ஜஸ் (Côte-des-Neiges) பகுதியில் கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில், மொன்றியல் பொலிஸ் அதிகாரி முகமது லமின் பென்ரெடோவன் (Mohamed Lamine Benredouane) மற்றும் பொதுமகன் மிஷெல் மிஸ்ராஹி (Michel Mizrahi) ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கனடாவில் தடையின்றி விற்கப்படும் ‘SKS’ ரகத் துப்பாக்கி என்பதை பல்வேறு தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, ஆயுதக் கட்டுப்பாட்டுக்காகப் போராடி வரும் நாட்டின் முதன்மை அமைப்பான ‘PolySeSouvient’ அமைப்பு, இந்த வகை ஆயுதங்களின் புதிய விற்பனையை மத்திய லிபரல் அரசு உடனடியாக அவசரச் சட்டம் மூலம் முடக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

1950-களில் சோவியத் யூனியனால் வடிவமைக்கப்பட்ட இந்த SKS துப்பாக்கிகள், கனேடியச் சந்தையில் மிகவும் மலிவான விலையில் பல ஆண்டுகளாக, விற்கப்பட்டு வந்துள்ளன. மத்திய அரசாங்கம் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல், போர்க்களங்களில் பயன்படுத்தப்படும் சுமார் 2,500 வகையான நவீனத் துப்பாக்கிகளை மக்கள் பயன்பாட்டுக்குத் தடை செய்துள்ளது. அத்துடன் அவற்றைப் பொதுமக்களிடமிருந்து திரும்பப் பெறும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.

எனினும், மொன்றியல் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ‘SKS’ ரகத் துப்பாக்கி, மத்திய அரசின் இந்த ஆயுதத்தடைப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

தற்போதைய சட்ட விதிகளின்படி, தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைக்கும் உரிமையாளர்கள், அதற்காகப் பெறும் இழப்பீட்டுப் பணத்தை (Taxpayer money) வைத்துக்கொண்டே, சந்தையில் தாராளமாகக் கிடைக்கும் புதிய SKS ரகத் துப்பாக்கியை சட்டப்பூர்வமாக வாங்க முடியும் என்ற நிலை காணப்படுகின்றது.

இதைச் சுட்டிக்காட்டியுள்ள PolySeSouvient அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹெய்டி ராத்ஜென் (Heidi Rathjen) ”ஒரு ஆபத்தான ஆயுதத்தை மீளப்பெற்றுக் கொண்ட மத்திய அரசு, அதே ஆபத்துள்ள வேறொரு ஆயுதத்தை வாங்க நிதியுதவி அளிக்கிறது” என்று விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை
அண்மைய செய்திகள்

கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை

ஆனி 27, 2026
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!
அண்மைய செய்திகள்

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டில் ‘இன்செல்’ கருத்தியல் தீவிரவாதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

ஆனி 27, 2026
ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.
அண்மைய செய்திகள்

ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.

ஆனி 27, 2026
‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.
அண்மைய செய்திகள்

‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.

ஆனி 27, 2026
அண்மைய செய்திகள்

ஆனி 25, 2026
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

ஆனி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும்  போராட்டம்

யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம்

4 நாட்கள் முன்னர்
‘கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த ‘ஃபெட் நேஷனல்’ தேசிய தினக் கொண்டாட்டங்கள் ரத்து

‘கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த ‘ஃபெட் நேஷனல்’ தேசிய தினக் கொண்டாட்டங்கள் ரத்து

2 நாட்கள் முன்னர்
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

4 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

4 நாட்கள் முன்னர்
‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In