பாலஸ்தீனத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாகப் போர்நிறுத்த ஒப்பந்தம் (Ceasefire) அமலில் உள்ள போதிலும், காசாவின் மத்தியப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய புதிய வான்வழித் தாக்குதலில் 8 வயதுச் சிறுவன் உட்பட மூன்று பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய காசாவின் டேர் அல்-பலாஹ் (Deir al-Balah) நகரில் இடம்பெயர்ந்த அகதிகள் தஞ்சம் புகுந்திருந்த தற்காலிகக் கூடாரம் ஒன்றை இலக்கு வைத்து, இன்று காலை 9:30 மணியளவில் இஸ்ரேலிய ராணுவம் திடீர் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
இஸ்லாமிய ஜிஹாத் (Islamic Jihad) அமைப்பைச் சேர்ந்த முக்கியப் போராளி ஒருவரைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் உரிமை கோரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கடந்த ஆண்டு அக்டோபரில் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை மீறியே, இஸ்ரேல் இத்தாக்குதலை நடத்தியுள்ளது.
போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்து எட்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும், காசாவின் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.











