EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் அடிக்கல் நாட்டு விழா

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் அடிக்கல் நாட்டு விழா

ஆடி 3, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மாகாணத்திற்கான குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் ஊடாக 2026ம் ஆண்டிற்கான மாகாண கல்வி அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,

80 ஆண்டுகளுக்கும் மேலான கல்விச் சேவையை வழங்கி வரும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி வட மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

“ஒரு நாட்டை நிலையான முறையில் கட்டியெழுப்புவதற்கான மிகப்பெரிய முதலீடு மனித வள மேம்பாடாகும். அந்த மனித வளத்தை உருவாக்குவதற்கான அடித்தளம் கல்வியே.

அதனால்தான் எமது அரசாங்கம் கல்வித் துறைக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

மேலும், போதைப்பொருள் வியாபாரிகள் மாணவர்களை இலக்காகக் கொண்டு சமூகத்தை சீரழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மாணவர்களின் கல்விப் பயணத்தில் நிலவும் சவால்கள் மற்றும் அழுத்தங்களை கருத்தில் கொண்டு கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் கல்வி முறைமையை மேம்படுத்த அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நிகழ்வின் நிறைவில், கல்லூரியின் வளர்ச்சிக்கும் கல்வி முன்னேற்றத்திற்கும் பங்களித்து வரும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் அமைச்சர் தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், கல்வித் திணைக்கள அதிகாரிகள், பாடசாலையின் பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்
அண்மைய செய்திகள்

பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்

ஆடி 3, 2026
கொழும்பில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்
அண்மைய செய்திகள்

கொழும்பில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்

ஆடி 3, 2026
வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்
அண்மைய செய்திகள்

வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

ஆடி 3, 2026
வீதிகளில் ஹெட்போன் அணிந்து பயணிக்கும் பாதசாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வீதிகளில் ஹெட்போன் அணிந்து பயணிக்கும் பாதசாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஆடி 3, 2026
ரகித ராஜபக்ஷவுக்கு  மீண்டும் விளக்கமறியல் உத்தரவு
அண்மைய செய்திகள்

ரகித ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு

ஆடி 3, 2026
வசந்த கரன்னாகொடவிற்கு பிணை
அண்மைய செய்திகள்

வசந்த கரன்னாகொடவிற்கு பிணை

ஆடி 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

ரகித ராஜபக்ஷவுக்கு  மீண்டும் விளக்கமறியல் உத்தரவு

ரகித ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு

6 மணத்தியாலங்கள் முன்னர்
வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

5 மணத்தியாலங்கள் முன்னர்
பிராம்ப்டன் (Brampton) நகரில் இரண்டு கார்கள் மோதிய விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பம்

பிராம்ப்டன் (Brampton) நகரில் இரண்டு கார்கள் மோதிய விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பம்

4 நாட்கள் முன்னர்
பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்

3 நாட்கள் முன்னர்
வடமாகாணத்தில் சாரதிகள் மற்றும் நடத்துநருக்கு புதிய சீருடை

வடமாகாணத்தில் சாரதிகள் மற்றும் நடத்துநருக்கு புதிய சீருடை

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In