EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த பிராந்திய ஆணையாளர் A.P.குணதுங்ஹ

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த பிராந்திய ஆணையாளர் A.P.குணதுங்ஹ

ஆடி 7, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய ஆணையாளர் A.P.குணதுங்ஹ, மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

கலந்துரையாடலில் பின்வரும் விபரங்களை யாழ்ப்பாண பிராந்திய ஆணையாளர் தெரியப்படுத்தினார்.

2023 ஆம் ஆண்டு வைகாசி 31 ஆம் திகதி 2334/21 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 01/01/2024 முதல் கட்டாயமாக வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தினை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் 2026 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரித்திருத்தச்சட்டத்துக்கு அமைவாக 01/04/2026 முதல்
வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பின்வரும் விடயங்களுக்கு அத்தியாவசியமானது எனத் தெரிவித்தார்.

1.வங்கிக் கணக்கைத் திறப்பதற்கு
2.கட்டடத் திட்டத்திற்கான ஒப்புதலைப் பெற்றுக்கொள்வதற்கு
3. ஒரு மோட்டார் வாகனத்தின் பதிவிற்கு
4.மோட்டார் வாகன உரிமம் புதுப்பிப்பதற்கு
5.நிலத்தின் பதிவு அல்லது நிலத்தின் உரிமை மாற்றத்திற்கு
6. இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்குகளை மாற்றுவதற்கு
7.கிரெடிட் கார்ட்டைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமாகின்றது என ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பின்வரும் இலகு நடவடிக்கை மூலம் வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரியப்படுத்தினார்.

பதிவு செய்திருப்பின் QR குறியீட்டை பயன்படுத்தி அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்தில் IRD பதிவு / சான்றிதழை சரிபார்க்கவும் என்ற இணைப்பினூடாக மின்னஞ்சல் அல்லது தொலைபேசிக்கு OTP இலக்கத்தைப் பெற்று TIN இலக்கத்தை பார்வையிட முடியும்.

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்காவிடின் நிகழ்நிலை (Online) முறைமை மூலமாகவோ அதாவது www.ird.gov.lk அல்லது உள்நாட்டு இறைவரித் திணைகளத்தில் உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சமர்பிப்பதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும். தற்போது பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கான TIN சான்றிதழ் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு 0212217333 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிய முடியும் எனவும் ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டது.

பிராந்திய ஆணையாளருடனான இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்
அண்மைய செய்திகள்

யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்

ஆடி 7, 2026
மாரவில பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன்
அண்மைய செய்திகள்

மாரவில பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன்

ஆடி 7, 2026
சுவிற்சர்லாந்து தூதுவரை சந்தித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள்
அண்மைய செய்திகள்

சுவிற்சர்லாந்து தூதுவரை சந்தித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள்

ஆடி 7, 2026
மன்னாரில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு
அண்மைய செய்திகள்

மன்னாரில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

ஆடி 7, 2026
வாழைச்சேனை குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்
அண்மைய செய்திகள்

வாழைச்சேனை குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்

ஆடி 7, 2026
கதிர்காமத்தை சென்றடைந்த சுப்பிரமணியம் என்றழைக்கப்படும் நாய்
அண்மைய செய்திகள்

கதிர்காமத்தை சென்றடைந்த சுப்பிரமணியம் என்றழைக்கப்படும் நாய்

ஆடி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கொரோனா அலைகளில் முதலில் பாதிக்கப்பட்டது இளைஞர்களே: கியூபெக் மருத்துவ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

கொரோனா அலைகளில் முதலில் பாதிக்கப்பட்டது இளைஞர்களே: கியூபெக் மருத்துவ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

5 நாட்கள் முன்னர்
நாட்டில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்

1 நாள் முன்னர்
யாழ்.ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த யாழ்.மறை மாவட்டத்திற்கான புதிய ஆயர்

யாழ்.ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த யாழ்.மறை மாவட்டத்திற்கான புதிய ஆயர்

6 நாட்கள் முன்னர்
யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்

யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்

4 மணத்தியாலங்கள் முன்னர்
கியூபெக்கின் ரெபென்டிக்னி நகர் சரக்கு ரயில் விபத்து! – காரணத்தைக் கண்டறிய உயர்மட்டப் புலனாய்வுக் குழு பணிப்பு

கியூபெக்கின் ரெபென்டிக்னி நகர் சரக்கு ரயில் விபத்து! – காரணத்தைக் கண்டறிய உயர்மட்டப் புலனாய்வுக் குழு பணிப்பு

21 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In