முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மாத்தறை, எலியகந்த வீதி, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னை நிலத்தை 6 கோடிக்கு கொள்வனவு செய்தது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி பெசில் ராஜபக்ஷ இன்றையதினம் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் அவருக்கு மீண்டும் பிடியாணை உத்தரவை மாத்தறை பிரதான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவானது இரண்டாவது முறையாகவும் இவர் நீதிமன்றில் ஆஜராகாததையடுத்து மாத்தறை பிரதான நீதிபதியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.











