EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில் இடம்பெற்ற 7ஆவது கூட்டு முகாமைத்துவக் கூட்டம்

யாழில் இடம்பெற்ற 7ஆவது கூட்டு முகாமைத்துவக் கூட்டம்

ஆடி 28, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு, ‘கூட்டு முகாமைத்துவக் குழு’ கூட்டத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை எட்டப்பட்டுள்ளது.

இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற 7ஆவது கூட்டு முகாமைத்துவக் கூட்டத்தில் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் பல்வேறு இடங்களிலிருந்தவாறு கலந்துக் கொண்டனர்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோரும், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திலிருந்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்திலிருந்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா மற்றும் கொன்சியூலர் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளி ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையானது பதவி வழி உறுப்பினர்கள் 3 பேரும், துறைசார் உறுப்பினர்கள் 4 பேருமாக மொத்தம் 7 பேர் கொண்டதாக அமைக்கப்படுவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், இக்கூட்டத்தில் பதவி வழி உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாகாண உள்ளூராட்சிக்குப் பொறுப்பான அமைச்சர் (மாகாண சபை இல்லாத சந்தர்ப்பத்தில் ஆளுநர்), புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர், யாழ். மாநகர சபையின் முதல்வர் , யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகிய 4 பதவி வழி உறுப்பினர்களும், துறைரீதியான 5 உறுப்பினர்களுமாக மொத்தம் 9 பேர் இச்சபைக்கு நியமிக்கப்படவுள்ளனர்.

துறை ரீதியாக 5 பேரையும் பெயர் குறித்து நியமிப்பதற்கும் யாழ். மாநகர சபை உட்பட அனைத்துத் தரப்புக்களும் இக்கூட்டத்தில் இணக்கம் தெரிவித்தன.

மேலும், யாழ். மாநகர சபையால் சுட்டிக்காட்டப்பட்ட ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த நம்பிக்கை நிதியப் பொறுப்பு உடன்படிக்கையிலுள்ள 12ஆவது சரத்தை நீக்குவதற்கும் அனைத்துத் தரப்புக்களும் இணக்கம் வெளியிட்டன.

இந்தச் சுமூகமான இணக்கப்பாடுகளையடுத்து, திருத்தப்பட்ட உடன்படிக்கையில் அனைத்துத் தரப்புக்களும் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திடுவதற்கான திகதியை மிக விரைவில் தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வெளிநாட்டு ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்குக் கனடா புதிய உத்தரவு: அமெரிக்க அமைப்புகள் கடும் எதிர்ப்பு!
அண்மைய செய்திகள்

வெளிநாட்டு ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்குக் கனடா புதிய உத்தரவு: அமெரிக்க அமைப்புகள் கடும் எதிர்ப்பு!

ஆடி 30, 2026
மொன்றியால்-ட்ரூடோ விமான நிலையத்தில் துர்நாற்றம்: அமெரிக்க சுங்கத் துறை சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
அண்மைய செய்திகள்

மொன்றியால்-ட்ரூடோ விமான நிலையத்தில் துர்நாற்றம்: அமெரிக்க சுங்கத் துறை சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

ஆடி 30, 2026
மொன்றியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் முதியவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணக்க காலக்கெடு அறிவிப்பு!
அண்மைய செய்திகள்

மொன்றியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் முதியவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணக்க காலக்கெடு அறிவிப்பு!

ஆடி 30, 2026
கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்ச பாதுகாப்புச் செலவீடு: கனடாவில் இளவரசர் ஹரி முதலிடம்!
அண்மைய செய்திகள்

கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்ச பாதுகாப்புச் செலவீடு: கனடாவில் இளவரசர் ஹரி முதலிடம்!

ஆடி 30, 2026
மொன்றியல் பொதுப்போக்குவரத்து நிதியளிப்பில் நிலவும் சீர்கேடுகளால் மக்கள் பாதிக்கப்படுவதாக லாவால் நகர மேயர் ஸ்டீபன் போயர் விமர்சனம்!
அண்மைய செய்திகள்

மொன்றியல் பொதுப்போக்குவரத்து நிதியளிப்பில் நிலவும் சீர்கேடுகளால் மக்கள் பாதிக்கப்படுவதாக லாவால் நகர மேயர் ஸ்டீபன் போயர் விமர்சனம்!

ஆடி 30, 2026
ஏறாவூர் வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம்
அண்மைய செய்திகள்

ஏறாவூர் வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம்

ஆடி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துங்கள் – மகேஷ் தெரிவிப்பு

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துங்கள் – மகேஷ் தெரிவிப்பு

6 நாட்கள் முன்னர்
மாத்தறை பகுதியில்  தீ விபத்து

மாத்தறை பகுதியில் தீ விபத்து

14 மணத்தியாலங்கள் முன்னர்
மொன்றியலில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த 29 வயது நபர் கைது!

மொன்றியலில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த 29 வயது நபர் கைது!

7 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டிற்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டிற்கு தீ வைப்பு

15 மணத்தியாலங்கள் முன்னர்
ஏறாவூர் வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம்

ஏறாவூர் வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம்

14 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In