EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

ஆடி 28, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இதன் போது உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவானார்.

சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் ஞா.கிசோர், உள்ளூராட்சி ஆணையாளரால் விடப்பட்ட சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி வீசியமை தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய முன்னாள் உப தவிசாளர் பதவியும் அவரது சபை உறுப்புரிமையும் கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி ஆளுநரால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வறிதாக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை புதிய உப தவிசாளர் தெரிவுக்காக சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.

அதன் போது தமிழரசு கட்சியின் சார்பிலும், ஜனநாயக தமிழ்தேசிய கட்சி சார்பிலும் இருவர் போட்டியிட்டனர்.

அதில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டவருக்கு, தமிழரசு கட்சியின் 6 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.

ஜனநாயக தமிழ்தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டவருக்கு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 06 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களும் வாக்களிப்பில் ஈடுபடாமல் நடுநிலை வகித்தனர்.

சாவகச்சேரி நகர சபையானது, 18 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். அதில் தமிழரசுக் கட்சியின் 06 உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் 06 உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்கள், அதில் ஞா.கிசோரின் உறுப்புரிமை வறிதாக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் , தேசிய மக்கள் சக்தியின் மூன்று உறுப்பினர்கள், அதில் ஒருவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அதன் அடிப்படையில் அவர்களில் இரு உறுப்பினர்கள். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு உறுப்பினர் என சபையில் தற்போது 16 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் , உப தவிசாளர் தெரிவுக்கான கூட்டத்திற்கு , 16 உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.

அதேவேளை குறித்த உப தவிசாளர் தெரிவினை நடத்த இடைக்கால தடை விதிக்குமாறு வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் முன்னாள் உப தவிசாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் கோரிக்கையை மன்று நிராகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தையிட்டியில் காணிகளை  கையளிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

தையிட்டியில் காணிகளை கையளிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஆடி 28, 2026
யாழில், இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது
அண்மைய செய்திகள்

மலேசியாவில் கைதான இரத்மலானை சைமா

ஆடி 28, 2026
மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’  பேருந்து சேவை ஆரம்பம்
அண்மைய செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்

ஆடி 28, 2026
வவுனியா நெடுங்கேணியில் உயிரிழந்த  5 மாதக் குழந்தை
அண்மைய செய்திகள்

வவுனியா நெடுங்கேணியில் உயிரிழந்த 5 மாதக் குழந்தை

ஆடி 28, 2026
முல்லைத்தீவில் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
அண்மைய செய்திகள்

முல்லைத்தீவில் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

ஆடி 28, 2026
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளை சந்தித்த பா.உ.திலகநாதன்
அண்மைய செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளை சந்தித்த பா.உ.திலகநாதன்

ஆடி 28, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள்  இடைநிறுத்தம்

செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் இடைநிறுத்தம்

4 நாட்கள் முன்னர்
அவசரப் பிரிவு மருத்துவப் பணியை கைவிடும் மருத்துவர்கள் – அதிர்ச்சி தரும் தேசிய ஆய்வு!

அவசரப் பிரிவு மருத்துவப் பணியை கைவிடும் மருத்துவர்கள் – அதிர்ச்சி தரும் தேசிய ஆய்வு!

1 நாள் முன்னர்
நீர்வேலியில் போதைப்பொருட்களுடன் கைதான  மூன்று இளைஞர்கள்

நீர்வேலியில் போதைப்பொருட்களுடன் கைதான மூன்று இளைஞர்கள்

2 நாட்கள் முன்னர்
மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியில் விபத்து – 18 பேர் படுகாயம்

மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியில் விபத்து – 18 பேர் படுகாயம்

3 நாட்கள் முன்னர்
கியூபெக் – லோங்வே மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் மோதல் — பொலிஸார் தீவிர விசாரணை!

கியூபெக் – லோங்வே மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் மோதல் — பொலிஸார் தீவிர விசாரணை!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In