இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் சுரபயா நகரில் இருந்து தெற்கு சுலவசி மாகாணம் மகசர் நகருக்கு இன்று 271 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த படகில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பலரும் கடலில் குதித்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படகில் சிக்கியவர்கள், கடலில் குதித்தவர்கள் என மொத்தம் 225 பேரை உயிருடன் மீட்டனர்.
வடகிழக்கு ஜாவாவின் மடூரா தீவு அருகே இந்த சம்பவம் இடம் பெற்ற நிலையில் இதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 41 பேர் கடலில் மூழ்கி மாயமாகினர். இதையடுத்து, கடலில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், படகில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.











