EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் – கடற்தொழில் அமைச்சர் தெரிவிப்பு

மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் – கடற்தொழில் அமைச்சர் தெரிவிப்பு

ஆவணி 17, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் எனவும், அத்தேர்தலில் அரசாங்கமே வெற்றிபெறும் எனவும் கடற்றொழில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் 7ஆவது வட்டார சபையாக வேலனை பிரதேசத்திற்கட்பட்ட, நயினாதீவு வட்டார சபை அமுதசுரபி அன்னதான மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பிலேயே தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது. அது ஒரு நல்ல விடயமாகும்.

ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரியே மக்கள் எமக்கு ஆணையளித்தார்கள். எனவே, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்களுக்கு எதிராகச் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் தொடர்கின்றன. இதில் சுமார் 3,000 சாட்சியாளர்கள் உள்ளனர். இந்நிலையில், இது தொடர்பில் ஆராயும் நீதிபதிகள் ஓய்வுபெற்றால், மீண்டும் முதலிலிருந்தே சாட்சி விசாரணைகளை நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரிகளுக்குத் தற்போதும் அச்சம் நிலவுகிறது. அதனால் தான் இந்த அரசாங்கத்தை வீழ்த்துவது பற்றி அவர்கள் பேசி வருகிறார்கள்.

இனவாதம், மதவாதம் மற்றும் சிறைச்சாலைக் கலவரம் எனப் பல வழிகளில் முயன்று பார்க்கின்றனர். ஆனால், அவை எதுவுமே கைகூடவில்லை. தற்போது விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகளைப் பூதாகரமாக்கியாவது ஏதேனும் செய்ய முடியுமா என்று பார்க்கிறார்கள்.

அதேவேளை, மீனவர் பிரச்சினை தொடர்பாக ஆகஸ்ட் மாத இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாத முதல் வாரத்திலோ தமிழக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

எமது மக்கள் 30 ஆண்டுகாலப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள். உறவுகள், உடமைகள் மற்றும் உயிர்கள் என அனைத்தையும் இழந்து, தற்போது தான் மீண்டும் நிமிர்ந்து நிற்கத் தொடங்கியுள்ளோம்.

எனவே, எமது கடல் வளத்தை அழிப்பதற்குத் தமிழக மீனவர்களுக்கு இடமளிக்க முடியாது. தமிழகத்தில் நல்ல மீனவர்களும் உள்ளனர். ஆனால், கடல் கொள்ளையில் ஈடுபடும் சிலர் தான் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்.

இந்நிலை நீடித்தால் எமது கடல் பகுதி பாலைவனமாகும் அபாயம் உள்ளது. எனவே, இது குறித்துத் தமிழக அரசிடம் தெளிவாக எடுத்துரைக்கப்படும். முதலாவது அதிகாரிகள் மட்டத்திலான பேச்சும், இரண்டாவது மீனவர் சங்கங்களுக்கு இடையிலான பேச்சும் நடத்தப்படும். தேவை ஏற்படின் தமிழக முதலமைச்சருடனும் பேசுவோம்.

இங்கிருந்து சென்று போட்டிபோட்டுக்கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் தமிழக முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்கின்றனர். ஆனால், எமது மீனவர்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதில்லை. மாறாக, மாகாணசபைத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டுமாம். மாகாணசபைத் தேர்தல் கட்டாயம் நடத்தப்படும், அதில் நாங்களே வெற்றியும் பெறுவோம்” எனமேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது
அண்மைய செய்திகள்

காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது

ஆவணி 18, 2026
புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி
அண்மைய செய்திகள்

புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

ஆவணி 18, 2026
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்
அண்மைய செய்திகள்

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்!

ஆவணி 18, 2026
செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள்

ஆவணி 18, 2026
யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்
அண்மைய செய்திகள்

யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்

ஆவணி 18, 2026
பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள  வழக்கு
அண்மைய செய்திகள்

பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள வழக்கு

ஆவணி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

முள்ளியவளையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுப் பெருவிழா

முள்ளியவளையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுப் பெருவிழா

4 நாட்கள் முன்னர்
கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

2 நாட்கள் முன்னர்
மயிலிட்டியில்  17ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

மயிலிட்டியில் 17ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

4 நாட்கள் முன்னர்
மித்தெனிய பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு

மித்தெனிய பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு

6 நாட்கள் முன்னர்
வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறை

வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறை

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In