உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக அறியப்பட்ட ‘A23a’, தெற்குப் பெருங்கடலின் வெப்பமான நீர் மற்றும் வலுவான கடல் நீரோட்டங்கள் காரணமாக முழுமையாக உருகி மறைந்துவிட்டதாக அமெரிக்க தேசிய பனி மையம் மற்றும் நாசா ஆய்வாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
அண்டார்டிகாவின் ஃபில்ச்னர் பனித் தட்டிலிருந்து கடந்த 1986-ஆம் ஆண்டு பிரிந்த இந்த பனிப்பாறை, 1991-ஆம் ஆண்டில் ‘A23a’ எனப் பெயரிடப்பட்டது.
ஆரம்பத்தில் சுமார் 4,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்த இது, இந்தியாவின் கோவா மாநிலம் அல்லது இந்தோனேசியாவின் பாலி தீவின் அளவிற்குக் சுமாரான பிரம்மாண்டமான பரப்பளவைக் கொண்டிருந்தது.
வெட்டல் கடலின் தரைப்பகுதியில் சிக்கியதால் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகராமல் ஒரே இடத்தில் முடங்கியிருந்த இந்த பனிப்பாறை, 2020-ஆம் ஆண்டில் கடல் நீரோட்டம் காரணமாக மீண்டும் தெற்குப் பெருங்கடலை நோக்கி நகரத் தொடங்கியது.
இருப்பினும், 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் வெப்பமான கடற்பகுதிகளைச் சென்றடைந்தபோது இது சிறுகச் சிறுக உடைந்து வேகமாகக் கரையத் தொடங்கி, தற்போது தனது 40 ஆண்டுகால வரலாற்றுப் பயணத்தை நிறைவு செய்துள்ளது.











