EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
நீட் இணையதளத்தை ஹேக் செய்த 12-ஆம் வகுப்பு கேரள மாணவர் – ஐஐடியில் பொறியாளராக நியமனம்

நீட் இணையதளத்தை ஹேக் செய்த 12-ஆம் வகுப்பு கேரள மாணவர் – ஐஐடியில் பொறியாளராக நியமனம்

புரட்டாதி 3, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கேரள மாநிலம் திருவல்லையைச் சேர்ந்த 16 வயதான ரைலன் அணில் என்ற 12-ஆம் வகுப்பு மாணவர், இந்தியாவின் முன்னணி உயர்கல்வித் தேர்வுகளான நீட் (NEET) மறுதேர்வு இணையதளம் மற்றும் ஐ.ஐ.டி ரூர்க்கியால் நிர்வகிக்கப்பட்ட ஜே.இ.இ அட்வான்ஸ்டு (JEE Advanced) தளங்களின் கிளவுட் சேமிப்பகத்தில் இருந்த மிக முக்கியப் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.

தேர்வு மையங்களின் விவரங்கள், பார்வையாளர்களின் தரவுகள், தேர்வர்களின் ஹால் டிக்கெட்டுகள் மற்றும் தேர்வு முடிவுகள் போன்ற பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் எவ்விதப் பாதுகாப்பும் இன்றி அணுகக்கூடிய நிலையில் இருந்ததைச் சுட்டிக்காட்டி அவர் வெளியிட்ட தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

தற்போது பெற்றோருடன் துபாயில் வசித்து வரும் இந்த மாணவரின் அசாதாரண கணினித் திறமையையும் சைபர் பாதுகாப்புப் புலமையையும் அங்கீகரிக்கும் வகையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஐ.ஐ.டி கான்பூர் நிறுவனம் அவரைத் தனது ‘C3iHub’ சைபர் பாதுகாப்பு புத்தாக்க மையத்தில் இளநிலைச் சைபர் பாதுகாப்புப் பொறியாளராகப் பணியமர்த்தியுள்ளது.

இதன் மூலம் ஐ.ஐ.டி வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் பொறியாளராகப் பணியமர்த்தப்பட்ட நபர் என்ற வரலாற்றுச் சாதனையை ரைலன் படைத்துள்ளார்.

பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து வரும் ரைலன், துபாயில் இருந்தபடியே தொலைதூர ஆலோசகராகப் பணியாற்றுவார் என்றும், கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பாதுகாப்பு பகுப்பாய்வுப் பணிகளில் மட்டுமே அவர் ஈடுபடுத்தப்படுவார் என்றும் ஐ.ஐ.டி கான்பூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிறுவயது முதலே ஹேக்கிங் சார்ந்த திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டுத் தனது 8-ஆம் வகுப்பு முதல் சைபர் பாதுகாப்பைக் கற்று வரும் இந்த மாணவரின் சாதனைக்குக் கல்வி மற்றும் தொழில்நுட்ப உலகினர் இடையே பலத்த பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் அரசுப் பேருந்திலிருந்து விழுந்து 8 பழங்குடியின மாணவிகள் காயம்!
உலகம்

ஓடும் அரசுப் பேருந்திலிருந்து விழுந்து 8 பழங்குடியின மாணவிகள் காயம்!

புரட்டாதி 3, 2026
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல்!
உலகம்

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல்!

புரட்டாதி 3, 2026
ரஷ்யாவில் வாடிக்கையாளரைத் தாக்க முயன்ற மனித உருவ ரோபோ!
உலகம்

ரஷ்யாவில் வாடிக்கையாளரைத் தாக்க முயன்ற மனித உருவ ரோபோ!

புரட்டாதி 3, 2026
‘ரஷிய வான்வெளியைப் பயன்படுத்த வேண்டாம்’ – ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
உலகம்

‘ரஷிய வான்வெளியைப் பயன்படுத்த வேண்டாம்’ – ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

புரட்டாதி 3, 2026
அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்
உலகம்

அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்

புரட்டாதி 3, 2026
சீனாவில் பாரிய வெள்ளம்
உலகம்

சீனாவில் பாரிய வெள்ளம்

புரட்டாதி 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்

1 நாள் முன்னர்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு

5 நாட்கள் முன்னர்
மணல் காட்டில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால்  தீ வைப்பு

மணல் காட்டில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைப்பு

5 நாட்கள் முன்னர்
வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

11 மணத்தியாலங்கள் முன்னர்
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமைக்கு எதிராக விரிவுரையாளர்கள் போராட்டம்

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமைக்கு எதிராக விரிவுரையாளர்கள் போராட்டம்

15 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In