கேப்காம் நிறுவனத்தின் உலகப் புகழ்பெற்ற வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்ஸ்’.
டி.ஜே.ஃபிக்ஸ்மேன் கதையில் கிடாவோ சகுராய் இயக்கத்தில் லெஜண்டரி பிக்சர்ஸ் நிறுவனம் கேப்காம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தில், இந்தியத் திரைஉலகின் பிரபல அதிரடி நாயகன் வித்யூத் ஜம்வால் சக்திவாய்ந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துத் தனது ஹாலிவுட் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இப்படத்தில் ஆண்ட்ரூ கோஜி, நோவா சென்டினியோ, காலினா லியாங், ஜேசன் மோமோவா மற்றும் பிரபல WWE மல்யுத்த வீரர் ரோமன் ரெயின்ஸ் உள்ளிட்ட சர்வதேச நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி உலகமெங்கும் இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இதன் விறுவிறுப்பான அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டிரெய்லரில் ‘தல்சிம்’ என்ற புகழ்பெற்ற வீடியோ கேம் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ள வித்யூத் ஜம்வாலின் மிரட்டலான அதிரடிச் சண்டைக் காட்சிகள் மற்றும் வித்தியாசமான உருவ அமைப்பு ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகின்றன.











