நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 47-வது திரைப்படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் திகதி என்பன அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு ‘சீன்’ (SCENE) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் தலைப்பு டீசரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இத்திரைப்படம் வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கின்றார்.
இத்திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா நசீம், நஸ்லென், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் தலைப்பு டீசரில் சூர்யாவின் புதிய தோற்றம் மற்றும் ஹேர்ஸ்டைல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.











