தமிழ் திரையுலகில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் ‘வித் லவ்’ படம் மூலம் கதாநாயகனாக முத்திரை பதித்த அபிஷன் ஜீவிந்த் மற்றும் கன்னடத் திரையுலகின் முன்னணி மூத்த நடிகரான சிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கும் இந்தப் புதிய திரைப்படத்திற்கு ‘பிக்காசோ’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
‘டிராமா கம்பெனி’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஏ. பாலமுருகன் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தில் நடித்த யோகலட்சுமி, சிவானி நாகராம் மற்றும் கானா வினோத் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
இத்திரைப்படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைக்கவுள்ளார்.
தமிழ் மற்றும் கன்னடத் திரையுலகின் இரண்டு முக்கிய நட்சத்திரங்கள் முதன்மைப் பாத்திரங்களில் ஒன்றிணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
சுவாரசியமான கதைக்களத்துடன் தயாராகிவரும் ‘பிக்காசோ’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர நடிகர்கள் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.











