வவுனியா, பூந்தோட்டத்தில் இருந்து வவுனியா நகரை அடையும் பிரதான வீதியில், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில் அமைந்திருந்த மரம் ஒன்று இன்று பெய்த கனமழை காரணமாக வேரோடு பாறி வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்திப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அனர்த்த முகாமைத்துவப் பிரிவினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வீதியில் வீழ்ந்துள்ள மரத்தை அகற்றி, போக்குவரத்தைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.











