பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெடிப்பில் வைத்தியசாலை கட்டிடத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.











