உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சுற்றுலா பணியகம் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண தொழில்துறை மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த உலக சுற்றுலா தினம் உணவுத் திருவிழா 3 நாள் நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை மன்னார் உப்புக்குளம் அல்பத்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் சந்திர சேசேகரன் கலந்து கொண்டார்.
மேலும் விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் உள்ளடங்களாக திணைக்கள தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.குறித்த நிகழ்வில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.
மேலும் வடமாகாண சுற்றுலா பணியகத்தின் புதிய இணையதளம் ஒன்றும் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.











