நடிகர் நாகர்ஜுனாவின் 100 வது திரைப்படமான ‘King100’ தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை, ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய இயக்குநர் ரா. கார்த்திக் இயக்குகிறார்.
இதில் நாகார்ஜுனா நடிப்பதோடு அசோக் செல்வன் இந்தப் படத்தில் நாகர்ஜுனாவுக்கு எதிரான முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அசோக் செல்வன் ஏற்கனவே படப்பிடிப்பில் இணைந்துள்ளதுடன் நடிகை தபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாகர்ஜுனா – தபு ஜோடி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைவது ரசிகர்களிடையே பெரியளவான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘King100’ படத்திட்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் வகையில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது, படத்தின் வெளியீடு 2026 டிசம்பர் 24 என அறிவிக்கப்பட்டுள்ளது.











