சவுதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளதாகவும் இத்தாக்குதலில் அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் சிவராசா அனோஜனின் தம்பியைத் தொடர்புகொண்டு வினவிவினவப்பட்ட போது , அனோஜன் தாக்கப்பட்டுள்ள விடயத்தை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அனோஜன் மீண்டும் தாக்கப்படக்கூடிய அபாயம் நிலவுவதுடன், சிறைச்சாலைக்குள் அவரது உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாகவும் அவரது தம்பி தெரிவித்துள்ளார்.
எனவே, சவுதி அரேபிய சிறைச்சாலை அதிகாரிகள், இலங்கை அரசு, வெளிவிவகார அமைச்சு மற்றும் சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
அனோஜனின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் தேவையான அனைத்து அவசர நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.











