யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியால் பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம் மற்றும் மணற்காடு ரோமன் கத்தோலிக்க பாடசாலை ஆகியவற்றுக்கு கணனிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலை மற்றும் செம்பியன்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றுக்கு மடிக்கணனிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், J/427 செம்பியன்பற்று வடக்கு தனிப்பனை மடுமாதா ஆலயத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக சிறுதொகை நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த உதவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி நேரடியாகச் சென்று வழங்கி வைத்துள்ளார்.











