EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வடக்கில் தற்கொலைகளைத் தடுக்கும் செயற்றிட்டம் விரிவாக்கம்: ஆளுநர் பணிப்புரை

வடக்கில் தற்கொலைகளைத் தடுக்கும் செயற்றிட்டம் விரிவாக்கம்: ஆளுநர் பணிப்புரை

ஐப்பசி 8, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்கொலை உயிரிழப்புகளைத் தடுக்கும் ஒருங்கிணைந்த செயற்றிட்டத்தை வடக்கு மாகாணத்தின் ஏனைய நான்கு மாவட்டங்களிலும் முக்கியத்துவத்துடன் முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சு மற்றும் அதன் கீழான திணைக்களங்களின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் புதன்கிழமை ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போதே ஆளுநர் இந்த வலியுறுத்தலை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தவறான முடிவெடுப்பால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்றிட்டத்தின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இவ்விடயத்தின் தீவிரத்தன்மை வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும், குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்திலும் காணப்படுவதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனைக் கருத்திற்கொண்டு, யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் ஒருங்கிணைந்த செயற்றிட்டத்தை மாதிரியாகக் கொண்டு மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இதுதொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி முன்னெடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை வழங்கினார்.

அத்துடன், மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் தற்போது உளவளத் துணையாளர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி இல்லாத நிலை தொடர்பிலும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

இதற்காக புதிய ஆளணியை உருவாக்குமாறு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

மேலும், வடக்கு மாகாண சபையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகப் பணியாற்றி வரும் துறைசார் கற்கைகளை நிறைவு செய்தவர்களில் பொருத்தமானவர்களைத் தெரிவுசெய்து மருத்துவமனைகளுடன் இணைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

தொடர்புடைய துறையில் பல்கலைக்கழக டிப்ளோமா கற்கையை நிறைவு செய்தவர்களை பயிற்சி அடிப்படையில் உடனடியாக சேவையில் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு, அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

வடக்கில் கடந்த 10 ஆண்டுகளில் 86,302 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்
அண்மைய செய்திகள்

வடக்கில் கடந்த 10 ஆண்டுகளில் 86,302 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்

ஐப்பசி 8, 2026
போலி களைநாசினிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்
அண்மைய செய்திகள்

போலி களைநாசினிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

ஐப்பசி 8, 2026
தமிழக மீனவர் தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றத்தின் கருத்து வரவேற்புக்குரியது: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
அண்மைய செய்திகள்

தமிழக மீனவர் தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றத்தின் கருத்து வரவேற்புக்குரியது: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

ஐப்பசி 8, 2026
புதிய மதுபான சாலைக்கு எதிர்ப்பு: தெல்லிப்பளையில் போராட்டம்
அண்மைய செய்திகள்

புதிய மதுபான சாலைக்கு எதிர்ப்பு: தெல்லிப்பளையில் போராட்டம்

ஐப்பசி 8, 2026
யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது

ஐப்பசி 8, 2026
தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வலியுறுத்தல்
அண்மைய செய்திகள்

தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வலியுறுத்தல்

ஐப்பசி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

நெடுந்தீவில் தூர்வாரப்படும்  13 கேணிகள்

நெடுந்தீவில் தூர்வாரப்படும் 13 கேணிகள்

3 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணத்தில் கையளிக்கப்பட்ட புதிய வீடுகள்

யாழ்ப்பாணத்தில் கையளிக்கப்பட்ட புதிய வீடுகள்

4 நாட்கள் முன்னர்
தென்மராட்சியில் சிறப்பாக இடம்பெற்ற  பண்பாட்டுப் பெருவிழா

தென்மராட்சியில் சிறப்பாக இடம்பெற்ற பண்பாட்டுப் பெருவிழா

5 நாட்கள் முன்னர்
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகல்லாகம கைது

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகல்லாகம கைது

1 நாள் முன்னர்
புதிய மதுபான சாலைக்கு எதிர்ப்பு: தெல்லிப்பளையில் போராட்டம்

புதிய மதுபான சாலைக்கு எதிர்ப்பு: தெல்லிப்பளையில் போராட்டம்

10 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check